டிரேடிங்கில் இழந்த நகையை மீட்க மாமியாரின் நகையை நூதனமாக கொள்ளை அடித்த மருமகள்.. போலீசில் சிக்கியது எப்படி.?
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அன்னை தெரேசா பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ். பேன்சி ஸ்டோர்ஸ் நடத்தி வரும் இவர் தனது மனைவி அஸ்வினி மற்றும் 5 வயது மகன் தங்கதுரையுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அற்புதராஜ் தனது மனைவி மற்றும் மகனை முத்தையாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கவைத்து விட்டு சென்னை சென்றுள்ளார். ஒரு நாள் திடீரென்று வீட்டிற்குள் படுதா அணிந்த ஒரு பெண் நுழைந்து இருவரையும் தாக்கி 62 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதனையடுத்து பதறிப்போன அற்புதராஜ் போலீசில் புகார் கொடுக்கவே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அஸ்வினி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஸ்வினி சென்னையில் இருந்தபோது ஆன்லைன் டிரேடிங் கம்பனியில் நகையை அடமானம் வைத்து முதலீடு செய்ததில் அனைத்தும் நஷ்டமாகியதாகவும் இதனை தன் கணவரிடம் இருந்து மறைப்பதற்காக அஸ்வினி தனது சகோதரி உதவியுடன் மாமியாரின் நகையை திருடி அஸ்வினி அடமானம் வைத்த நகையை மீட்டு எடுக்கவே இவ்வாறு செய்ததாக போலீஸிடம் கூறியுள்ளார். மேலும் படுதா அணிந்து வீட்டுக்கு வந்த பெண் தன் அக்கா தான் என்றும் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.