எப்படி அனுப்பி வைச்சேன் உன்னை இப்படி வந்திருக்கியே.. கதறி துடித்த தாய்...காண்போரை கண்கலங்க வைத்த சோகம்..!!



How did I send you to come like this.. The crying mother... The tragedy that made the eyes of the eyed..!!

குடும்ப வறுமையால் வெளிநாடு சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி நான்கு மாதங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையம் திரும்பியவரை கட்டி அணைத்து அவரது தாய் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. 

சென்னை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் சுப்பையா, அழகி தம்பதியர். இவர்களுக்கு வீரபாண்டி (25), அழகு பெருமாள் (22) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்புசுப்பையா கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டு அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியாமல் போனது. குடும்ப வறுமை காரணமாக 10-ஆம் வகுப்பு படித்து முடித்த வீரபாண்டி கடந்த ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டிற்கு 20 ஆயிரம் சம்பளத்திற்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் கீப்பராக வேலைக்கு சென்றுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி பணி முடித்து அவர் தங்கியிருக்கும் அறைக்கு திரும்பும் போது கனரக வாகனம் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் பக்ரைன் நாட்டின் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வீரபாண்டிக்கு விபத்து நடந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலைக் கேட்டுப் பதறி போன பெற்றோர் தம் மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என்று நினைத்தனர். இந்த நிலையில் அவரை சென்னைக்கு அழைத்து வர லட்சக்கணக்கில் பணம் செலவாகும். கையில் பணம் இல்லாத காரணத்தினால் செய்வதறியாமல் தவித்தனர்.

உடனே வெளிநாடு தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டு தன் மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நான்கு மாத போராட்டத்திற்குப் பின்னர் விமானம் மூலம் வீரபாண்டியை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரது தாயார் அழகி கதறி துடித்து ஓடி வந்து தன் மகனை கட்டி அணைத்து கதறி அழுத காட்சி பார்ப்பவரை கண்கலங்க வைத்தது. அதன் பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வீரபாண்டியை அழைத்துச் சென்றனர்.