கொடுமையான சம்பவம்.. பணிக்கு சென்ற பொறியாளருக்கு நேர்ந்த விபரீதம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!horrible-incident-tragedy-happened-to-an-engineer-who-w

சென்னையில் சாலையை கடக்கும்போது அரசு பேருந்து மோதியதில் இன்ஜினியர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரியை சேர்ந்த ரிஷிகவுதம் என்பவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ரிஷிகவுதம் தர்மபுரியில் இருந்து பணிக்கு செல்வதற்காக சென்னை வந்துள்ளார். அப்போது அங்கிருந்து சாலையை கடக்க முயலும் போது கும்பகோணத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று ரிஷிகவுதம் மீது மோதியது.

Road accident

இந்த சம்பவத்தில் ரிஷிகவுதம் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ரிஷிகவுதமின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பேருந்தின் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.