கோர சம்பவம்.. கிருஷ்ணகிரி அருகே லாரியின் மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து.. பதைப்பதைக்க வைக்கும் காட்சிகள்..!



Horrible incident.. Near Krishnagiri the following vehicle collided with the lorry.. Shocking scenes..!

சென்னையில் இருந்து ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியை முந்தி செல்ல முயன்ற வாகனம் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் அதிபயங்கரமாக மோதியது.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த சந்தீப் மற்றும் அமான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். மேலும் ரியாஸ், மித்து ஜிலால், கிருஷ்ணன் சந்த் ஆகிய மூன்று பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

accident
இதனையடுத்து விபத்துக் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லாரியையும் வாகனத்தையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.