ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்! வித்தியாசமான முறையில் ஹெல்மெட்டை விற்பனை செய்த கடைக்காரர்.

ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்! வித்தியாசமான முறையில் ஹெல்மெட்டை விற்பனை செய்த கடைக்காரர்.


helmet-onion

சேலத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஹெல்மெட் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இதனை பயன்படுத்தி கொண்ட சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு ஹெல்மெட் வியாபாரி தனது கடையில் புதிய சலுகையின் மூலம் ஆயிரகணக்கான ஹெல்மெட்டை ஒரே நாளில் விற்பனை செய்துள்ளார்.

அதாவது ஒரு ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற புதிய அறிவிப்பின் மூலம் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஹெல்மெட்டுகளை விற்பனை செய்துள்ளார்.

Helmet

அதாவது தற்போது வெங்காயத்தின் விலை தங்கத்தின் விலையை போல் ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே வருவதால் இந்த சலுகையை அறிமுகப்படுத்தினால் ஹெல்மெட் வியாபாரம் அமோகமாக நடைபெறும் என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்தியதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார். 

அவர் நினைத்தது போலவே ஹெல்மெட் வாங்க தான் போகிறோம் அது கடையில் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக கிடைக்கும் என்ற நோக்குடன் அந்த கடைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.