தமிழகம்

பின்னால் அமர்ந்து சென்றாலும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்..! மாநகர காவல்துறை அறிவிப்பு..!

Summary:

பின்னால் அமர்ந்து சென்றாலும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!..மாநகர காவல்துறை அறிவிப்பு..!.

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் நபர்கள்  மீது  மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நடந்த விபத்துகளை ஆய்வு செய்ததில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த 15ஆம் தேதி வரை இருசக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும்,  844 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த விபத்துகளில், ஹெல்மெட்  அணியாமல் பயணித்ததால் 80 பேரும்,  பின் இருக்கையில் பயணம் செய்த 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.  இருசக்கர வாகன ஓட்டிகள் 714 பேரும்,  பின்னால் அமர்ந்து பயணம் செய்த 127 பேரும் காயம் அடைந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக விபத்துக்களை குறைக்கவும், உயிரிழப்புகளை தவிர்க்கவும் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement