புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விடிய விடிய பெய்த மழை! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்!!
வெகுநாள் கழித்து கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பணிக்கு செல்பவர்கள் வாகன நெரிசலில் அவதிப்பட்டு உள்ளனர்.
வழக்கமாகவே திங்கட்கிழமை அன்று சென்னையில் வாகன நெரிசல் ஏற்படும் அத்துடன் இரவு முழுவதும் பெய்த மழையால் தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்கள் செல்லவதற்கு மிகவும் சிரமமாக இருந்துள்ளது.