தென் தமிழகத்தில் கனமழை; வரலாறு காணாத அளவில் மழைபொழிவை பெற்ற மணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள்!

தென் தமிழகத்தில் கனமழை; வரலாறு காணாத அளவில் மழைபொழிவை பெற்ற மணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள்!heavy-rain-in-south-tamilnadu

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை தொடர்ந்து, திருநெல்வேலி மலைப்பகுதியிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. முதல் முறையாக, மணிமுத்தாறு அணையில் 200 மிமீட்டருக்கும் அதிகமாக 286 மிமீ மழை பதிவாகி இருக்கிறது.

தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் சிறப்பாக மழை பெய்து இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “வடகிழக்குப் பருவமழை தொடங்கியபின், திருநெல்வேலி மலைப்பகுதியிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. முதல் முறையாக, மணிமுத்தாறு அணையில் 200 மிமீட்டருக்கும் அதிகமாக 286 மிமீ மழை பதிவாகி இருக்கிறது.

heavy rain in south tamilnadu

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று கன மழைபெய்து இருக்கிறது. முதல் முறையாக 200 மிமீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் சிறப்பாக மழை பெய்து இருக்கிறது.

heavy rain in south tamilnadu

நவம்பர் 3 காலை 8:30 மணி வரையில் தென் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு பெற்ற பகுதிகளில் சில,

மணிமுத்தாறு அணை, திருநெல்வேலி - 286 மிமீ
சாத்தான்குளம், தூத்துக்குடி - 219 மிமீ 
குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி - 195 மிமீ
பாபநாசம் அணை, திருநெல்வேலி - 160 மிமீ
நம்பியாறு அணை, திருநெல்வேலி - 125 மிமீ
திருச்செந்தூர், தூத்துக்குடி - 112 மிமீ