சென்னையில் விடிய ,விடிய கொட்டி தீர்த்த கனமழை.! குளிர்ந்து போன சென்னை மாநகரம்.!

சென்னையில் விடிய ,விடிய கொட்டி தீர்த்த கனமழை.! குளிர்ந்து போன சென்னை மாநகரம்.!



heavy rain in chennai

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி வரை அடுத்த மூன்று நாளைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் விடிய ,விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கேளம்பாக்கம், படூர், புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

rain

அதேபோல் கோயம்பேடு, அண்ணாநகர், கே.கே.நகர், அசோக்நகர், ஆழ்வார்பேட்டை, பூவிருந்தவல்லி, வளசரவாக்கம், ராமாபுரம், வடபழனி, கிண்டி, அடையார், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இன்று சென்னை முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.