ஜூலை 1 முதல் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?.! வானிலை ஆய்வு மையம் தகவல்..!heavy-rain-alert-for-5-districts

தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காற்றின் மேற்கு திசையின் காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திகுறிப்பில், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

rain

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம், பந்தலூர், பார்வூட், தாலுகா அலுவலகம் போன்ற பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சின்னகல்லார், தேவலா, நடுவட்டத்தில் தலா 5 சென்டிமீட்டர் மழையும், கூடலூர் பஜார், மேல் கூடலூர் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழையும், வால்பாறை, சோலையார், மேல்பவானியில் தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.