மனைவி கண்முன்னே துடிதுடித்து இறந்த கணவன்.! என்ன காரணம்.? சுகாதாரத்துறை அமைச்சர் கொடுத்த தகவல்.!

மனைவி கண்முன்னே துடிதுடித்து இறந்த கணவன்.! என்ன காரணம்.? சுகாதாரத்துறை அமைச்சர் கொடுத்த தகவல்.!



health minster talk about raja death

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராஜா என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி கயல்விழி உடன் இருந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் சென்றதால் ராஜா மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜாவிற்கு கடந்த இரண்டு வாரங்களாக ஆக்ஸிஜன் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூச்சுத் திணறல் இருந்த காரணத்தினால் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக அவரது ஆக்ஸிஜன் அளவு ஓரளவு சீராக்கப்பட்டு நன்றாக பேசிவந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் அவருடைய மனைவி மட்டுமே அவருடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை காலை அவரது மனைவி தனது கணவர் ராஜாவுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவரிடம் இருந்த ஆக்ஸிஜனை நீக்கிவிட்டு, அங்கிருந்த ஆக்ஸிஜன் கருவியை அவசர அவசரமாக எடுத்துச் சென்றுள்ளனர். ஆக்ஸிஜனை நீக்கியதும் ராஜாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

corona patient death

இந்தநிலையில், ராஜாவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார். கணவனின் இழப்பைத்தாங்க முடியாத கயல்விழி, கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த ராஜாவின் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

இந்தநிலையில், ராஜாவின் இறப்புக்கு காரணம் மருத்துவர் அல்ல என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவரது மனைவி உணவு வழங்கிக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவ தரப்பினர் விசாரணையில் தெரிய வருவதாகக் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மாரடைப்பு காரணமாகவே ராஜா உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.