'வந்து எனக்கு மசாஜ் செய்து விடு' மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர்!!Headmaster arrested for abusing School Girls

மிழகத்தில் மட்டுமில்லாமல் உலக நாடுகளில் அனைத்துக்கும் பொதுவாக வளர்ந்து வருவது இந்த பாலியல் அத்துமீரல். உலக நாடுகளுக்கிடையே இருக்கும் ஒரே ஒற்றுமை இதுதான் என்று சொல்வதற்கே வேதனையாக உள்ளது.

நாள்தோறும் 20 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளை நாம் கேட்டு தான் வருகிறோம். சிறியவர் - பெரியவர் வயது வித்தியாசம் இன்றி, ஆண் - பெண் பாலினம் வித்தியாசம் இன்றி, இந்த பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது.

அந்தக் காலத்தில் பள்ளிக்கு சென்று விட்ட வீடு திரும்பும் போது பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர வேண்டும் என்று பெற்றோர்கள் பயந்து கொண்டு இருந்த காலம் சென்று பள்ளிக்கு அனுப்புவது என்பதே  பாதுகாப்பில்லா நிலைமையை உருவாக்க செய்துள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர், பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பது போன்ற செயல்கள் பெருகி வருகிறது. அந்த வகையில் சேலம், மேட்டூர் அருகே இயங்கி வரும் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் ராஜா என்பவர் மாணவிகளிடம் அத்து மீறி உள்ளார்.

இதனால் அவர் போக்ஷோவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் ராஜா மாணவிகளிடம் தனக்கு மசாஜ் செய்துவிட சொல்லி தொல்லை செய்துள்ளார் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடந்த விசாரணையில் தலைமை ஆசிரியர் ராஜா மாணவிகளுக்கு மட்டுமில்லாமல் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இம்மாதிரியான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்என்பது தெரிய வந்துள்ளது. இதன் பின், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.