அரசியல் தமிழகம்

கமல் மீது செருப்பு வீசியவரை பொன்னாடை போர்த்தி கவுரவித்த ஹெச்.ராஜா!!

Summary:

H raja wishes to who thrown a-slipper to kamal


அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கற்கள் வீசப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கமல்ஹாசன் கட்சி உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நடிகர் கமல்ஹாசன் கோட்சே பற்றி பேசியது பெரிய சர்ச்சையாகி தேசிய அளவில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் நான் கூறியது சரித்திர உண்மை என கூறியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கடந்த 16 ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் முட்டை, கல், செருப்பு ஆகியவற்றை மர்ம நபர்கள் வீசியுள்ளனர். கல்வீசிய நபா் மீது கட்சி தொண்டா்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினா். இதனைத் தெடா்ந்து கல் வீசிய நபரை காவல் துறையினா் கைது செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் தற்போது போரட்டம் நடத்தினர். 

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் பிரசாரக் கூட்டத்தில் காலணி வீசியவரை பாஜக தேிசய செயலாளா் ஹெச்.ராஜா தனது வீட்டிற்கு அழைத்து பொன்னாடை அணிவித்து மகிழ்வித்துள்ளாா். 

 


Advertisement