அரசியல் தலைவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் நெத்தியடி! இந்த நல்ல விசயத்தை நாமும் செய்யலாமே

அரசியல் தலைவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் நெத்தியடி! இந்த நல்ல விசயத்தை நாமும் செய்யலாமே


gv prakash started new way to save govt schools

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டிய அரசானது பள்ளிகளை மூடுவதிலே குறியாக உள்ளது.

தனியார் பள்ளிகளின் மோகம் பெற்றோர்களிடம் அதிகரித்துவிட்டது. கிராமப்புறங்களில் கூட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகின்றனர். இதற்கு காரணம் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தல் இருப்பதே. 

சமீபகாலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. 

gv prakash

இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் சாதித்த பல தமிழர்கள், அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி, யு.கே.ஜி சொல்லித் தரும் ஆசிரியர்களின் சம்பளத்தை நான் ஏற்றுள்ளேன். எனது ரசிகர்கள் மற்றும் அயல்நாட்டில் இருக்கும் தமிழர்கள், இதேபோல் கிராமத்தில் இருக்கும் பள்ளியைத் தத்தெடுத்து உதவ வேண்டுகிறேன் என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.