தமிழகம்

அந்த பிஞ்சு குழந்தை எப்படி துடிச்சிற்கும்..!! 3மாத குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய பாட்டி..

Summary:

அந்த பிஞ்சு குழந்தை எப்படி துடிச்சிற்கும்..!! 3மாத குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய பாட்டி..

கோவை கவுண்டன்பாளையத்தில் 3 மாத ஆண் குழந்தையை கொலை செய்த பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் பாஸ்கரன் -  ஐஸ்வர்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதில் ஆண் குழந்தை ஒன்று. பெண் குழந்தை ஒன்று. ஆண் குழந்தைக்கு ஆரியன் என்றும் பெண் குழந்தைக்கு  ஆரிகா ஸ்ரீ என்றும் பெயரிட்டிருந்தனர்.

இந்நிலையில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி ஐஸ்வர்யாவின் வீட்டில் வந்து தங்கியுள்ளார். கடந்த 2 மாதமாக அவர் குழந்தைகளை கவனித்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தைகளுக்கு மருந்து வாங்குவதற்காக ஐஸ்வர்யா வெளியே சென்றுள்ளார்.

மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யாவிடம், குழந்தைகளை யாரோ தூக்கி சென்றுவிட்டதாக ஐஸ்வர்யாவின் தாய் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, வீட்டிற்குள் சென்று தேடி பார்த்தபோது, ஆண் குழந்தை பிறப்புறுப்பில் காயங்களுடன்  படுக்கையில் கிடந்துள்ளது.

பெண்  குழந்தை வீட்டில் கழிப்பறைக்குள் அழுக்கு துணியால் வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளனது. இதனை பார்த்து கதறி அழுத ஐஸ்வர்யா கணவர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி வீட்டில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஆண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளார். மேலும் பெண் குழந்தைக்கு சிகிச்சை நடைபெற்றுவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள சாந்தியை தேடி வருகின்றனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், சாந்தி கடந்த 15  ஆண்டுகளாக மனரீதியான பாதிப்புடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. சொந்த பாட்டியே பேரனை கொலை செய்து, பேத்தியை கொடுமையாக தாக்கிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement