தமிழகம்

தாத்தாவால் பேத்திக்கு நிகழ்ந்த கொடூரம் - நீதிமன்றம் அளித்த தண்டனை!

Summary:

grand father-pathi

கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் ஹார்பர் ரோட்டை சேர்ந்தவர் 58 வயதான இருதய தாசன். இவர் தனது பேத்தி  உட்பட மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு மணக்குடி கிராமத்தில் சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது தனது பேத்தியை மட்டும் தனியே ஒரு பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் சித்ரவதை செய்துள்ளார். அந்த பச்சிளம் குழந்தை அழுது கொண்டே தனது பெற்றோரிடமிருந்து அனைத்தையும் கூறியுள்ளது. இதனையடுத்து குழந்தையின்  பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இருதய தாசனுக்கு 10 வருட சிறைத் தண்டனையும் மேலும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. ஒரு வேலை ஐம்பதாயிரம் ரூபாய் கட்ட தவறினால். மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என  தீர்ப்பளித்துள்ளது.


Advertisement