தமிழகம்

நடைப்பயிற்சியில் 10,000 கிலோ மீட்டரை கடந்து சாதனை படைத்த அரசு பள்ளி ஆசிரியர்! அவர் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கூறும் அறிவுரை!

Summary:

govt school teacher crossed 10000 kilometers in walking


புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பொன்.பாலச்சந்திரன் அவர்கள் நடைபயிற்சி மூலம் (ரன் கீப்பர்) 10,000 கிலோ மீட்டரை கடந்து சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் பொன்.பாலச்சந்திரன். இவர் புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, மரம் வளர்ப்பது, நாட்டுநலப்பணி திட்டம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஆசிரியர் பாலச்சந்திரன் "ரன் கீப்பர்" என்ற ஆப் ம்மூலம் தினந்தோறும் நடைபயிற்சி செய்துவருகிறார். இந்தநிலையில் இன்று( 26.12.2019) நான் நடைபயிற்சி ஆப் மூலம் 10,000 கிலோ மீட்டரை கடந்து சாதனைப்படைத்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் பாலச்சந்திரன் கூறுகையில், தற்போதைய வாழ்கை முறையில் நடைப்பயிற்சி அனைவருக்கும் அவசியம் ஆகும். நடைப்பயிற்சியை தினந்தோறும் செய்துவந்தால் நோயற்ற வாழ்வை வாழமுடியும். இதுபோன்ற மொபைல் ஆப் அனைவரையும் நடைப்பயிற்சி, ரன்னிங், ஸ்விம்மிங் போன்ற பயிற்சிகளை செய்ய ஊக்கப்படுத்தும் என கூறியுள்ளார்.

இதனால், ஆசிரியர் பாலச்சந்திரன் அவரின் முன்னாள் மாணவர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து, அவர்களது குடும்பத்தினரையும், உறவினர்களையும் இதுபோன்று பயிற்சிகளை செய்வதற்கு அறிவுரை கூறுகிறார். அனைவரும் இதுபோன்ற பயிற்சிகளை செய்து பயனடைய செய்யுமாறு அறிவுரை கூறுகிறார் ஆசிரியர் பாலச்சந்திரன்.


Advertisement