டெல்லியில் தமிழுக்கு பெருமை சேர்த்த அரசு பள்ளி மாணவர்கள்! மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

டெல்லியில் தமிழுக்கு பெருமை சேர்த்த அரசு பள்ளி மாணவர்கள்! மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!


Govt school students have tamil banner in delhi

 

டெல்லியில் நடைபெறும் ரோபட்டிக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள். தமிழில் பெயர் பலகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டிக்கான தகுதித்தேர்வில் 300 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அருப்புக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த தனியார் ரோபோடிக் நிறுவனம் மூன்று பிரிவுகளாக நடத்திய போட்டியில், 50 அணிகள் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் பங்குபெற்றனர்.

இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, மாநில அளவிலான ரோபாட்டிக் கண்காட்சியில் முதலிடம் பிடித்தனர். இதனையடுத்து புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் ஆலங்குடி அரசு ண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

டெல்லியில் நடைபெறும் ரோபோட்டிக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழில் பெயர்ப் பலகையை ஏந்தியவாறு சென்றனர்.

டெல்லியில் நடைபெறும் ரோபோட்டிக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள் அவர்களது பள்ளியின் பெயரை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதி
பெயர்ப் பலகையை ஏந்தியவாறு சென்றனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தமிழில் எழுதிய
பெயர்ப் பலகையை ஏந்தியவாறு சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. நீங்களும் இதனை பகிர்ந்து மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவியுங்கள்.