ஒரே மாவட்டத்தில் 5 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!

ஒரே மாவட்டத்தில் 5 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!


govt school students affected by corona

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிக்காத, வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறந்த சில நாட்களிலே நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவி தனிமைப்படுத்தப்பட்டார்.

corona

அதேபோல் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் அரியலூரில் இருவேறு பள்ளிகளை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், 12-வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த வகுப்பறை மூடப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்திற்குள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், வல்லிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1 மாணவிக்கும், செம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கும், மாமல்லபுரம் மேல்நிலைப் பள்ளியில் 1 மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுராந்தகம் அரசு உதவி பள்ளியில் 2 ஆசிரியர்கள் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.