அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது கோவம்.! காரில் விரட்டிசென்ற மருத்துவர்... பரிதாபமாக போன உயிர்.! சோக சம்பவம்.!

அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது கோவம்.! காரில் விரட்டிசென்ற மருத்துவர்... பரிதாபமாக போன உயிர்.! சோக சம்பவம்.!govt doctor died in accident

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே என்.ஜி.ஓ. காலணி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் கார்த்திகேயன். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் கார்த்திகேயனின் மனைவியும் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடந்த சனிக்கிழமை இரவு தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து இன்று காலை கார்த்திகேயன் திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது பரம்புபட்டி அருகே திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பெருத்து ஒன்று கார்த்திகேயனின் காரை உரசிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த கார்த்திகேயன் பேருந்தை நிறுத்துவதற்காக தனது காரில் வேகமாக விரட்டி சென்றுள்ளார். அப்போது பரம்புபட்டி அருகே முந்திச்செல்ல முயன்றபோது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை தாண்டி மறுபுறம் உள்ள சாலையில் மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் மருத்துவர் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அங்கு நடந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.