இந்த மனசு தான் சார் கடவுள்.! 9 பவுன் நகை மற்றும் பணத்தை பேருந்திலே விட்டுச்சென்ற பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ஷ்டம்.!

இந்த மனசு தான் சார் கடவுள்.! 9 பவுன் நகை மற்றும் பணத்தை பேருந்திலே விட்டுச்சென்ற பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ஷ்டம்.!


govt-bus-driver-and-conductor-handover-the-missing-jewe

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் நேற்று கோயம்புத்தூரிலிருந்து பொன்னமராவதிக்கு வரும் அரசு பேருந்தில் திண்டுக்கல்லில் ஏரி கொட்டாம்பட்டியில் இறங்கியுள்ளார். மகாலட்சுமி தனது கையில் வைத்திருந்த 9 பவுன் நகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ரூ.2 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை பேருந்தில் தவற விட்டுச்சென்றுள்ளார்.

பேருந்தை விட்டு கீழே இறங்கி சிறிது தூரம் சென்ற பிறகுதான் மகாலட்சுமிக்கு தன் கையிலிருந்த பையை பேருந்திலே தவற விட்டது தெரியவந்தது. இதனியறிந்து பதறிப்போன மகாலட்சுமி உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். இந்தநிலையில் மகாலட்சுமி பயணித்த அந்த பேருந்து பொன்னமராவதி வந்தடைந்தது. அந்த பேருந்தில் கிடந்த பையை ஓட்டுநர் தவச்செல்வம், நடத்துனர் மனோகரன் ஆகிய இருவரும் போக்குவரத்து பணிமனையில் உள்ள மேலாளரிடம் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து பையை தவறவிட்ட மகாலட்சுமியை வரவழைத்து அவரிடம் விசாரித்து நகை மற்றும் பணம் இருந்த பையை ஒப்படைத்துள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மையான செயலை பலரும் பாராட்டியுள்ளனர். பையை பெற்றுக்கொண்ட மகாலட்சுமியும் இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.