
government officer suspended
வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கணவரை இழந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் அவர் விதவை சான்றிதழ் வாங்குவதற்காக சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் என்பவரிடம் மனுக் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணிற்கு சான்றிதழ் வழங்காமல், காலம் தாழ்த்தி வந்த வருவாய் ஆய்வாளர், அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண்ணிற்கு இரவு நேரங்களில் போன் செய்து, ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து தன்னுடைய உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று அவரிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர். ஆனாலும் அவர் திமிராக பேசியுள்ளார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்று ஜெயக்குமாரை இடைநீக்கம் செய்தார். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், வருவாய் ஆய்வாளர் மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.
Advertisement
Advertisement