அரசு பேருந்தில் படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு.. 5 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..! தர்மபுரியில் பரிதாபம்..!!

அரசு பேருந்தில் படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு.. 5 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..! தர்மபுரியில் பரிதாபம்..!!


government bus steps breakdown in dharmapuri

பள்ளி மாணவர்கள் படியில் பயணித்தபோது, திடீரென படிக்கட்டு உடைந்ததால் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோட்டில் விழுந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அடுத்த சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சவுளூர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சிவாடி பகுதியின் கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்றுள்ளது. அப்போது காலை 8:46 மணிக்கு 2ஆம் எண் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் நின்று பயணித்ததாக கூறப்படுகிறது.

tharmapuri

Representave image

இந்த நிலையில் பேருந்து, சவுளூர் பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கும் போது திடீரென கடைசி படிக்கட்டு உடைந்துள்ளது. இதில் படிக்கட்டில் பயணத்தை ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே விழுந்துள்ளனர். கீழே விழுந்ததில் ஒரு மாணவனுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் படியில் பயணிக்ககூடாது என்று காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதனை கேட்காது பயணம் செய்வதால் பல பாதிப்புகள் ஏற்படுவதுடன் உயிர்சேதம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.