அரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு அதிரடி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு அதிரடி!


good-news-for-government-school-students

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கையில், நீட் தேர்வின் அடிப்படையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

Govt school

இந்தநிலையில் மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவத்தில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இந்தநிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டிலேயே உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.