தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்..! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!!

தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்..! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!!


gold-rate-reduced-T4F5V7

கொரோனா சமயத்தில் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. 

தற்போது நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துவருவதால், தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை இறங்கு முகத்தில் இருந்துவருகிறது.

gold rate

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,600 விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்துவந்த தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.