ஆத்தாடி... மீண்டும் ராக்கெட் வேகத்தில் சென்று மிரள வைக்கும் தங்கம் விலை.!

ஆத்தாடி... மீண்டும் ராக்கெட் வேகத்தில் சென்று மிரள வைக்கும் தங்கம் விலை.!



gold rate increased

கொரோனா ஆரம்ப காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. ஒருசவரன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரம் நெருங்கி அதிர்ச்சியை அளித்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். 

இதன்காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,465-க்கும், சவரன் ரூ.35,720க்கும் விற்பனை ஆகிறது. 

gold rate

இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.73 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20-க்கு விற்கிறது.  சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.