ஆசைப்பட்டது கிடைக்காததால் ஆடு மேய்க்க சென்ற பள்ளி மாணவி!! சில நாட்களில் வீட்டை தேடிவந்த அதிர்ஷ்டம்!

ஆசைப்பட்டது கிடைக்காததால் ஆடு மேய்க்க சென்ற பள்ளி மாணவி!! சில நாட்களில் வீட்டை தேடிவந்த அதிர்ஷ்டம்!


Goat Shepherd's School Girl

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பூதலாபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றியிருக்கும் ஏழை மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் 54 பேரும், பனிரெண்டாம் வகுப்பில் 55 பேரும் இந்த கல்வியாண்டில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வைஷ்ணவி என்ற மாணவி 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு 11-ஆம் வகுப்பிற்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் மாணவி வைஷ்ணவிக்கு வரலாறு பாடத்தில் அதிகம் விருப்பம் இருந்துள்ளது. இதனால் தலைமை ஆசிரியரை பார்த்து, எனக்கு வரலாறு பாடம் என்றால் பிடிக்கும், தயவு செய்து அந்த பாடப்பிரிவில் என்னை சேர்த்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஆசிரியர் அந்த பிரிவு நிரம்பி விட்டது. வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளது அதில் சேர்ந்து கொள் என்று கூறியுள்ளார். ஆனால் வைஷ்ணவி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க எனக்கு விருப்பமில்லை. எப்படியாவது கருணை காட்டி நான் கேட்ட வரலாற்று பாடத்தை தாருங்கள் என்று கெஞ்சியுள்ளார்.

school girl

ஆனால் தலைமை ஆசிரியர் அதில் வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லி விட்டதால். மாணவி விருப்பமில்லாத கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் சேர்ந்தார். ஆனால் அதில் வைஷ்ணவியால் கவனம் செலுத்த முடியவில்லை.

கவனம் செலுத்த முடியாத படிப்பு படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? என்று எண்ணி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்தது பற்றி கூறியுள்ளார். பின்னர் வைஷ்ணவியின் வீட்டில் உள்ள ஆடுகளை மேய்த்து வந்தார். இந்த தகவல் அயன்வடமலாபுரம் சமூக சேவகர் வரதராஜனிடம் சென்றுள்ளது. வரதராஜன் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்து, அதில் மாணவியின் நிலையைப் பற்றி கூறியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் அந்த மாணவி கேட்கும் பாடம் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவி வைஷ்ணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.