தமிழகம்

தன்னை கடத்தி சென்றதாக கதறிய இளம்பெண்! அம்பலமான உண்மையால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!

Summary:

girl told lie for escape from parents

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பெண் ஒருவர் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணிடம் அவரது  பெற்றோர்கள் ஏன் தாமதம் என்று கேள்வி எழுப்பிய நிலையில்,  அவர் தன்னை நான்கு பேர் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் பெண் கூறிய இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் நடந்தவற்றை விவரித்து கேட்டுள்ளனர். ஆனால் அந்தப் பெண் சற்று தயங்கியுள்ளார்.

 இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அப்பொழுது தன்னை கடத்திச் சென்றதாக கூறிய அந்த பெண் இளைஞன் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் தான் காதலுடன் வெளியே சென்றுள்ளதாகவும், வீட்டிற்கு வர தாமதமானதால் இப்படி ஒரு பொய்யை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து போலீசார்கள் அந்தப் பெண்ணிற்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். 
 


Advertisement