பக்கத்துக்கு வீட்டு வாலிபர் தாக்கியதால், இளம்பெண் எடுத்த அவசர முடிவு, பதறி போன குடும்பத்தார்.!
பக்கத்துக்கு வீட்டு வாலிபர் தாக்கியதால், இளம்பெண் எடுத்த அவசர முடிவு, பதறி போன குடும்பத்தார்.!

தன்னையும் தனது தந்தையையும் பக்கத்து வீட்டு இளைஞர் தாக்கியதால் மனமுடைந்து அவமானம் தாங்கமுடியாத இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் அருகே ஏ.ரெட்டி அள்ளி பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவரது மனைவி லதா. இவர்களுக்கு வித்யாஸ்ரீ என்ற மகள் உள்ளார் . வித்யாஸ்ரீ அருகாமையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.சி முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாதையன் வீட்டிற்கும்,பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேந்திரன் குடும்பத்தாருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ராஜேந்திரன் குடும்பத்தாருக்கும், மாதையன் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட சண்டையில் ராஜேந்திரன் மகன் நிர்மல்குமார், மாதையன் மற்றும் அவருடைய மகள் வித்யஸ்ரீயை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் அவமானப்பட்டு மனமுடைந்த வித்யாஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாதபோது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
பின்னர் அவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு வித்யாஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.