கணவன், மாமனாரால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! காரணமாக இருந்த கழிப்பறை!



Girl suicide because of no bathroom

திருநெல்வேலி மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளது. திருமணம் ஆன நாளில் இருந்தே வீட்டில் கழிவறை கட்டி தருமாறு ஷாலினி தனது கணவரிடம் கேட்டுள்ளார்.

ஆனால், திருமணம் முடிந்து 7 வருடம் ஆகியும் சசிகுமார் கழிவறை கட்டித்தராமல் தட்டி கழித்துள்ளார். இதனால் ஷாலினிக்கு அவரது கணவர் சசிகுமாருக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் ஷாலினி தனது கணவர் மற்றும் மாமனார் பால்பாண்டியுடன் கழிவறை குறித்து சண்டை போட்டுள்ளார்.

Crime

ஒருகட்டத்தில் மனமுடைந்துபோன ஷாலினி வீட்டிற்குள் சென்று தூக்குபோட்டு கொண்டதாக அவரது கணவர் ஷாலினியின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார். தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுத ஷாலினியின் பெற்றோர் தங்களது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் சசிகுமார், பால்பாண்டி இருவரும் சேர்ந்து அடித்து கொன்றுவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்திவருகின்றனர்.