சீரழிக்க வந்தவனை குத்தி கொலை செய்த பெண்.! பெண்ணிற்கு குவிந்துவரும் பாராட்டுக்கள்.! நடந்தது என்ன.?

சீரழிக்க வந்தவனை குத்தி கொலை செய்த பெண்.! பெண்ணிற்கு குவிந்துவரும் பாராட்டுக்கள்.! நடந்தது என்ன.?


girl-production-murder-in-thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அல்லிமேடு கிராமத்தைச் சார்ந்த பெண்மணி கவுதமி. இவர் தாய், தந்தையை இழந்து உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது, கௌதமியை பின்தொடர்ந்து சென்ற உறவினர் அஜித் என்பவன், அப்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான். 

தனது உயிரை காப்பாற்ற எண்ணிய பெண்மணி, போதையில் இருந்த அஜித்தின் கத்தியை பிடுங்கி, அஜித்தை குத்தி கொலை  செய்துள்ளார். இதனையடுத்து சோழாவரம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்து தன்னிடம் அத்து மீறி நடக்க முயன்றதால், அஜீத்தை குத்தி கொலை செய்துவிட்டதாக கூறி, அந்த கத்தியையும், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Murderஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை செய்து, பெண் தனது பாதுகாப்பிற்காக கொலை செய்துள்ளதால், அதனை கொலையாக கருதாமல் தற்காப்புக்காக நடத்தப்பட்ட கொலை என உறுதி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கவுதமியை விடுதலை செய்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.