தமிழகம்

திருமணம் முடிந்து ஒரே வருடத்தில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Summary:

Girl murdered in vellore with in one year of her marriage

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல வரதட்சணை கொடுமைகள் ஒருபக்கம் குறைந்திருந்தாலும் எதாவுது ஒரு இடத்தில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரே ஆண்டில் இளம் பெண் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் வீரபத்திரன் அடிக்கடி மது அருந்திவிட்டு சங்கீதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், உன் தாய் வீட்டிற்கு சென்று நகை, பணம், டூவிலர் வாங்கி வருமாறு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல மீண்டும் வீரபத்திரன் குடித்துவிட்டு சங்கீதாவிடம் தகராறு செய்துள்ளார். சிறுது நேரம் கழித்து அருகில் இருந்த கிணற்றில் சங்கீத உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகப்பட்டு அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement