தமிழகம்

கல்யாண பொண்ணு செய்யும் காரியமா இது? மணமகனுக்கு பதிலாக தாலி கட்டிய வேறு மாப்பிளை.

Summary:

Girl married lover on marriage date parents shocked

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் மோனிகா(20). மோனிகாவிற்கும், ஆந்திராவை சேர்ந்த தங்களது உறவினர் மோகன்ராஜ் என்பவருக்கும் தங்கள் மகளை திருமணம் செய்துவைக்க மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்து அதன்படி இன்று திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோனிகா நேற்று மாலை வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். இரவு 9 மணி ஆகியும் மோனிகா வீடு திரும்பவில்லை. அவரது தொலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய மோனிகா கடந்த ஒரு வருடமாக தான் காதலித்துவரும் கார்த்திக் என்பவரை திருமணம் செய்த்க்கொண்டதாக தந்தைக்கு போன் செய்துகூறியுள்ளார். மேலும், அருகில் இருந்த காவல் நிலையத்தில் தனது கணவருடன் மோனிகா தஞ்சம் அடைய இருவரின் பெற்றோரையும் கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அனுப்பிவைத்தனர்.


Advertisement