பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பல் மருத்துவர் தலைமறைவு.. அதிகாரிகள் வலைவீச்சு.!

பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பல் மருத்துவர் தலைமறைவு.. அதிகாரிகள் வலைவீச்சு.!


girl harassment in nellai

செய்முறை பயிற்சிக்காக வந்த மாணவிக்கு பல் டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததால், பெற்றோரின் புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில், பல் மருத்துவமனை ஒன்றை டாக்டர் சுகுமார் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவரிடம் மானூர் பகுதியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி செய்முறை பயிற்சி பயின்று வந்துள்ளார்.

தொடர்ந்து மாணவிக்கு செய்முறைப் பயிற்சி கொடுத்து வந்தபோது, டாக்டர் சுகுமார் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை மாணவி கண்டித்துள்ளார். இருப்பினும் ஒரு வேளை மாணவி இதனை வெளியில் சொல்லிவிடுவாரோ, இதனால் நமக்கு அவமானம் நேர்ந்து விடுமோ! என்ற பயத்தில் மாணவியை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.

nellai

இதனால் கோபமுற்ற மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தனது வீட்டில் கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஆவேசமடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை காவல் துறையினரிடம் டாக்டர் சுகுமார் குறித்து புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டாக்டர் சுகுமாரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அத்துடன் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த சுகுமார், தனது மருத்துவமனையை இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாக இருக்கும் சுகுமாரை பிடிப்பதற்காக போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.