தமிழகம்

இருமலுக்காக மருத்துவமனைக்குச் சென்ற இளம்பெண் திடீர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

Girl dead while taking treatment for cough

சென்னை குன்றத்தூர் தரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் நித்யா. 23 வயது நிறைந்த இவர் தனது படிப்பை முடித்த நிலையில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நித்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தொடர் இருமல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் நித்யாவை அனகாபுத்தூரில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 அங்கு மருத்துவர் நித்யாவை பரிசோதனை செய்துவிட்டு ஊசி போட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சில நொடிகளிலேயே நித்யா மயங்கி விழுந்துள்ளார் இந்நிலையில் கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் அவரை  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு நித்யா மயக்க நிலையில் இருப்பதைக் கண்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளனர்.

 இதனை தொடர்ந்து நித்யாவை அவரது பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.

மேலும் அவர்கள் அனகாபுத்தூரில் தனியார் கிளினிக்கில் நித்யாவிற்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான்  அவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement