தமிழகம்

குடும்ப சண்டையால் மனமுடைந்தை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்..!

Summary:

குடும்ப சண்டையால் மனமுடைந்தை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை,..ஆர்.டி.ஓ விசாரணை..!

திண்டிவனம் அருகே  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (32). கூலி தொழிலாளி. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்த ஷர்மிளா (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு குழந்தை இல்லை. இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை மாலை அசோக், அவரை சமாதானம் செய்து வைரபுரத்துக்கு கூட்டிச் வந்துள்ளார். அப்போதும், கணவன் - மனைவி இடையே மறுபடியும் சண்டை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, அசோக் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். 

அப்போது, வீட்டில் தனியாக இருந்த ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அசோக், மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில் வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஷர்மிளா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் வட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Advertisement