தமிழகம்

இளம் பெண்ணின் தற்கொலைக்கு காரணமான பேய்..! கடித்தை படித்து அதிர்ச்சியடைந்த போலீசார்..! பீதியில் மக்கள்.!

Summary:

Girl commit suicide police found mysterious letter in her room

தனது தற்கொலைக்கு பேய்தான் காரணம் என எழுதிவிட்டு இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது சத்திரப்பட்டி என்னும் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கோபி. கூலி வேலை செய்துவரும் இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் லத்திகா என்பவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறையில் வீட்டில் இருந்துவந்த லத்திகா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் முடிந்ததில் இருந்து லத்திகா யாரிடமும் சரியாக பேசவில்லை, அவரது செயல்பாட்டிலும் நிறைய மாற்றங்கள் தெரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் லத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லத்திகா தற்கொலை செய்துகொண்ட தகவல் அந்த பகுதி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லத்திகா இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

பென்சிலால் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் இருந்த தகவலை படித்ததும் அனைவரும் சற்று அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கக்கூடும், ஆம், அப்பா. அம்மா என்னை யாரோ பயமுறுத்துராங்க. அப்பா நைட்டு தூக்கம் இல்லை. என்ன சாக வானு கூப்பிடுறாங்க. இதை யாரிடமாவது சொன்னால் வீட்டில் உள்ள எல்லோரையும் கொன்னுடுவேன்னு அந்த பேய் என்ன மிரட்டுது.

என்ன சாக கூப்பிடுது என்னை ஏதாவது பண்ண சொல்லுதுபா இல்லைனா நம்ம குடும்பத்தை அழிப்பேன்னு சொல்லுதுபா. யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க என்னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட்டில் வைக்க வேண்டாம். எல்லாம் நன்மைக்கே தம்பி தங்கச்சி நீங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க. லவ் யூ மை ஃபேமிலி’ என்று அந்த கடிதத்தில் லத்திகா எழுதி வைத்துள்ளார்.

கடிதத்தில் எழுதியுள்ள தகவல் குறித்த உண்மைத்தன்மை குறித்துபோலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லத்திகா பயன்படுத்திய செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். லதிகாவின் மரணம் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவர் கடிதத்தில் எழுதியிருந்த தகவல் அந்த பகுதி மக்களை சற்று அதிர்ச்சியிலும், பயத்திலும் ஆழ்த்தியுள்ளது.


Advertisement