தமிழகம்

மகன் காதலிக்கும் பெண்ணிற்கு தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்த தந்தை..! உடந்தையாக இருந்த தம்பதி..!

Summary:

Girl abused by lover father in Nagapatinam

மகனின் காதலியை தந்தை கடத்திச்சென்று தாலி கட்டி, பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம் (வயது 38). காய்கறி கடை வைத்திருக்கும் இவருக்கு முகேஷ்கண்ணன்(20) என்ற ஒரு மகன் உள்ளார். முகேஷ்கண்ணன் ஐ.டி.ஐ. படித்தபோது தன்னுடன் பயின்ற 21 வயது இளம் பெண் ஒருவரை காதலித்துள்ளார்.

காதலர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் ஊருக்கு வந்த நிலையில் மகனின் காதல் விவகாரம் தந்தைக்கு தெரியவந்துள்ளது. மகன் காதலிப்பது பிடிக்காத கருப்பு நித்யானந்தம் விபரீத முடிவுக்கு சென்றுள்ளார்.

அதன்படி, மகன் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவர், தன்னுடன் வந்தால் தனது மகனுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூற, அந்த பெண்ணும் அவரை நம்பி அவருடன் காரில் சென்றுள்ளது. இளம் பெண்ணை காரில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லாமல் அங்கு உள்ள ஒரு கடையில் வைத்து, மிரட்டி அந்த பெண்ணுக்கு தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் கருப்பு நித்யானந்தம்.

அத்துடன் விடமால், அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் அந்த பெண்ணை அடைத்துவைத்து பாலியல் கொடுமை செய்துள்ளார். அங்கிருக்கு தப்பித்து வந்த இளம் பெண் இதுகுறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

பெண் கொடுத்த புகாரை அடுத்து, அவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த போலீசார் கருப்பு நித்யானந்தம் மற்றும் அவருக்கு வீடு கொடுத்து உதவி செய்த அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(47), அவரது மனைவி பவுன்ராஜவள்ளி(38) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement