தொழுகை சத்தம் கேட்டதும் பாட்டுக்கச்சேரி இடைநிறுத்தம்.. வேற்றுமையில் ஒற்றுமையை நிரூபித்த செஞ்சி மக்கள்..!!

தொழுகை சத்தம் கேட்டதும் பாட்டுக்கச்சேரி இடைநிறுத்தம்.. வேற்றுமையில் ஒற்றுமையை நிரூபித்த செஞ்சி மக்கள்..!!Gingee peoples Hindu Muslim Brotherhood Friendship

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அமைந்துள்ள செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளால் களைகட்டும். 

இந்நிலையில், நேற்று இரவு விழாக்குழு சார்பாக பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இடையில் மசூதியில் தொழுகைக்கான ஒலி கேட்டது. 

அதனைத்தொடர்ந்து, சகோதரதத்துவ மதத்தினரின் இறைவணக்கத்திற்கு தலைவணங்கி, பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சி ஒரு சில நிமிடம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நகர மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிரூபித்து இருக்கின்றனர்.