தமிழகம்

சும்மா தக்காளி பெட்டிதானேனு சோதனை செய்த போலீசார்.. சோதனையின்போது காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

தக்காளி பெட்டிக்குள் வைத்து ஜெலட்டின் குச்சிகளை கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தக்காளி பெட்டிக்குள் வைத்து ஜெலட்டின் குச்சிகளை கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்பத்தூர் வழியாக கேரளாவிற்கு தக்காளி லோடுடன் மினி லாரி ஒன்று நேற்று இரவு சென்றுள்ளது. அப்போது கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசார் தக்காளி ஏற்றி வந்த மினி லாரியை சோதனை செய்தபோது தக்காளி பெட்டிக்கு அடியில் குச்சி குச்சியை, டியூப் போன்று ஏதோ நீட்டிக்கொண்டிருப்பதை கவனித்துள்ளனர். இதனை அடுத்து லாரி முழுவதும் சோதனை செய்தபோது திருட்டுத்தனமாக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரித்ததில், பாறைகளை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் போன்றவாற்றை இவர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக சேலத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலுவாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.

லாரியியில் இருந்த 35 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7,500 டெட்டனேட்டர்களையும் போலீசார் கைப்பற்றியதோடு லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement