மாதத்தின் முதல் நாளே காத்திருக்கும் ஷாக்..!! சமையல் எரிவாயு சிலிண்டர் திடீர் விலை உயர்வு..

மாதத்தின் முதல் நாளே காத்திருக்கும் ஷாக்..!! சமையல் எரிவாயு சிலிண்டர் திடீர் விலை உயர்வு..


Gas Cylinder rate increased 25 rupees

வீட்டு உபயோக சிலிண்டர் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதமும் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு இன்று மீண்டும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

gas cylinder

இதன்மூலம் ஒரே ஆண்டில் வீட்டு உபயோக சிலிண்டர் எரிவாயு விலை 285 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இந்தநிலையில், இன்று மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.900.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 75 அதிகரித்து 1831.50க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.