தமிழகம்

புதுக்கோட்டையில் கஜா! ஆடியோ மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்

Summary:

Gaja at pudukkottai

கஜா புயலால் நாகை, புதுகை, தஞ்சை மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் முறிந்து விழுந்ததால் இந்த மாவட்டங்கள் முழுவதும் மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்தும் ரத்தாகி உள்ளது. அத்தியாவசிய பொருள் வினியோகம் அடியோடு முடங்கி உள்ளது. 

கடலில் உருவான அதி தீவிர புயலான கஜா,  வேதாரண்யத்தில் கரையை கடந்து புதுக்கோட்டை மாவட்டம் வழியாக சென்றதால், அந்த மாவட்டமே மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது.

இந்த மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆலங்குடி, கறம்பக்குடி, மாங்காடு, வடகாடு இதை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலம் மின்கம்பங்கள் அனைத்தும் சேதமடைந்து மின்சாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. 


சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொலைபேசி கோபரங்கள் சேதமடைந்ததால் தொலைத்தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முந்திரி, பலா, மா மரங்கள் அனைத்தும் முற்றிலும் தரைமட்டமாகின. இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து வாடுகின்றனர். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது கஜா புயலால் பாதிக்கப்பட்ட தனது மாவட்டத்தில் மீடபு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். மேலம் எந்த உதவி தேவைப்பட்டாலும் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆடியோ ஒன்றினை பேசி வெளியிட்டுள்ளார்.


Advertisement