"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
ஓடும் ஆட்டோவில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.! திடீரென ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி.! கானா பாடகர்கள் கைது.!
சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில்,சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கானா பாடகா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த 2 வாலிபர்கள் திடீரென மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துக்கள்ளார்.
ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவி குதித்ததில் மாணவி பலத்த காயமைடைந்துள்ளார். இதனையடுத்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சினிமாவில் பாடல் பாடிய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெகன் என்கிற டோலாக் ஜெகன், கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி ஆகிய இருவரை கைது செய்தனர்.