தமிழகம் Covid-19

உலகத்தையே அதிரச் செய்த கொரோனா மாஸ்க்..! இதை தாண்டி கொரோனா எப்படி உள்ள வருதுன்னு பாக்கலாம்.!

Summary:

Funny corono mask photo goes viral

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முதியவர் ஒருவர் அணிந்துவந்த விதியசமான மாஸ்க் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் வீடுகளிலையே இருக்கும்படி அரசு அறிவுறித்தி வருகிறது.

இந்நிலையில், ஏதாவது சில காரணங்களுக்காக மக்கள் வெளியே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதில், சிலர் முகத்தில் மாஸ்க் அணிந்தும், சேலை, சுடிதார் துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டும் வெளியில் சுற்றி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, வைரஸில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள, முதியவர் ஒருவர் சாக்குப் பையை முகத்தில் கட்டியபடி கம்பீரமாக இருச்சக்கர வாகனத்தில் வலம் வந்துள்ளார். இது என்னடா புது மாஸ்க்கா இருக்கு என அனைவரும் அந்த முதியவரை ஆச்சரியத்துடன் பார்த்துவருகின்றனர்.


Advertisement