தமிழகம்

கொரோனா கோரத்தாண்டவம்! நாளை முழுஊரடங்கு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Summary:

Full lockdown in 4 district for coronovirus

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி தற்போது கோரத்தாண்டவமாடி வருகிறது.  மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே வருகிறது. மேலும் இதுவரை 2526 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, மே 3 வரை பிறப்பிக்கபட்ட ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா அசுர வேகத்தில் பரவிவரும் காரணமாக கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 4 மாவட்டங்களில் மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் எனவும், இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


Advertisement