தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு.! தேவையின்றி வெளியே வந்தால் ஆப்பு.! போலீசார் கடும் எச்சரிக்கை.!

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு.! தேவையின்றி வெளியே வந்தால் ஆப்பு.! போலீசார் கடும் எச்சரிக்கை.!


full-lock-down-in-tamilnadu-GYE7AU

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் 24 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவலின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்போது மருத்துவ அவசியம் உள்ளிட்ட காரணத்தை தவிர்த்து, தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

full lock downதடையை மீறி வெளியே வருவோர் மீது, வழக்கு பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மருத்துவம் மற்றும் இறப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு மட்டுமே, இ-பதிவு முறையில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களின் எல்லைகளில் போலீசார், 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.