தமிழகம்

15000 ரூபாய்க்காக நண்பனையே கொலை செய்த கும்பல்.. விழுப்புரம் போலீசார் அதிரடி வேட்டை!

Summary:

Friends killed a friend at villipuram

விழுப்புரம் மாவட்டத்தில் 15000 ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக நண்பனையே கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நிசார். இவர் கேரளாவில் ஒரு ஹோட்டலில் பணியாற்றியவர்.

நிசாரிடம் அவரது நண்பர்களான குமரேசன், அப்பு மற்றும் முகமது ஷாஜகான் ஆகிய மூவரும் 15000 ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். நீண்ட நாட்களாகியும் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை.

இதனால் கோபமடைந்த நிசார், பணத்தை திருப்பி தராவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும் என போனில் மிரட்டியுள்ளார். எனவே அவர்கள் மூவரும் நிசாரை தீர்த்துகட்ட முடிவு செய்துவிட்டனர்.

நிசாரை கொலை செய்ய திட்டமிட்டு  பணத்தை திருப்பி தருவதாக பொய் சொல்லி அவரை சமரச நகருக்கு வரவழைத்தனர். பைக்கில் வந்த நிசாரை மூவரும் சேர்ந்து திட்டமிட்டபடி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் போலீசார் குற்றவாளிகளை தேட ஆரம்பித்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் சின்ன கோட்டக்குப்பம் முந்திரி தோப்பில் பதுங்கியிருந்த மூன்று குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement