கண்கலங்க வைக்கும் சம்பவம்.! சக தமிழனை காப்பாற்ற நீரில் மூழ்கிய மாணவர்கள்..! ரஷ்யாவில் நடந்த சோகம்.!

Four Tamil Nadu medical students in Russia drown in river


four-tamil-nadu-medical-students-in-russia-drown-in-riv

ரஷ்யா நாட்டில் மருத்துவம் படித்துவந்த தமிழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மனோஜ் ஆகிய நான்கு இளைஞர்கள் ரஷ்யாவின் Volgograd பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தங்கி மருத்துவம் படித்துவந்தனர்.

மேலும் சில தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்களும் அதே பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்துவருகின்றனர். இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் ரஷ்யாவின் வால்கா நதிக்கரைக்கு சென்றபோது ஒரு மாணவர் நீரில் மூழ்கி அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

சக மாணவனை காப்பாற்றுவதற்காக மேலும் மூன்றுபேர் நீரில் குதித்து காப்பாற்றும் முயற்சியில் அவர்களும் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். தங்களது மகன் மருத்துவராக இந்தியா வரவேண்டும் என்ற கனவோடு காத்திருந்த பெற்றோருக்கு மகன் உயிரிழந்த தகவல் கேட்டதும் கதறி துடித்துள்ளனர்.

தற்போது கொரோனா சமயம் என்பதால் 4 பேரின் உடலையும் விரைவாக தமிழகம் கொண்டுவர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இறந்த மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.