கொடநாடு விவகாரம் தற்போது தேவையா.? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கேள்வி.!

கொடநாடு விவகாரம் தற்போது தேவையா.? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கேள்வி.!



former minister jayakumar talk about kodanadu issue

தற்போது தமிழக அரசியலில் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது கொடநாடு கொலை கொள்ளை சம்பவம். குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபடுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை பட்டினபாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிப்பது மரபை மீறியது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து விதி எண் 55-ல் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறிய செயல். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து சட்டமன்றத்தில், இதற்கு முன்னர், எந்த காலத்திலும் விவாதித்தது கிடையாது. இது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. 

சட்டமன்றத்தில் விவாதிக்க எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. இந்தநிலையில், கொடநாடு விவகாரம் அவசரமாக விவாதிக்க வேண்டிய ஒன்றா? கொடநாடு விவகாரம் குறித்து பேசி, முன்னாள் முதலமைச்சருமான தற்போதைய எதிர்க்கட்சி தலைவருக்கு மன ரீதியான துன்புறுத்தலை அளிக்கின்றனர். நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டமன்றம் எடுத்துக்கொள்ள முடியுமா? ஜனநாயக மரபுகளை திமுக அரசு கட்டிக்காக்கும் என நம்புறேன் என குறிப்பிட்டுள்ளார்.