பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய ஏழை விவசாயி!

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய ஏழை விவசாயி!


formar make temple for modi


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்ற விவசாயிக்கு திருமணமாகி ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
சங்கர் சிறு வயதில் இருந்தே பிரதமர் மோடியின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். 

இந்தநிலையில் அவர் தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பியுள்ளார். இந்த நிலையில் துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார். 

modi

சங்கர் தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார். பா.ஜனதாவின் தொண்டராகவும், எரகுடி விவசாய சங்க தலைவராக இருந்து வரும் சங்கர் கூறுகையில், சொந்த செலவில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்ட விரும்பினேன். ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோவில் கட்ட முடியவில்லை.

தற்போது, கிடைத்த ஓரளவு வருமானத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோவில் கட்டினேன். பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் என்பதாலும், அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன் என விவசாயி சங்கர் கூறியுள்ளார்.